.

17 November 2012

 நல்ல தொழிற்சங்கமும் நாமும்   

 ஒரு நல்ல முதலாளி, நல்ல அரசு, நல்ல நிர்வாகம் நேர்மையான ஊழியர்கள், இருக்கும் வரை எந்த ஒரு தொழிலும், துறையும் யாதொருவிதமான சிக்கலுமின்றி சிறப்பாகவே இயங்கும், வளரும்.  காலப்போக்கில் மேற்கண்ட முறைமைகள் எல்லாம் தேய்ந்து வீணாகிய போதுதான் தொழிலாளிக்கு சிக்கல்கள் உருவானது.  தொழிற்சங்கம் அவசியமாயிற்று.
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் தொலைபேசித் தொழிலாளிக்கென மிகப் பெரிய பங்கு பாத்திரம் உண்டு. இன்றைக்கும் அன்றைய 68 போராட்ட தியாகத்தைக் கொண்டாடுகின்ற தொழிலாளியாக நமது தொழிலாளர்கள்தான் இருக்கின்றார்கள். பல பிரதம அமைச்சர்களை. மந்திரிகள் பலரை நேருக்கு நேர் சந்தித்து தொலைபேசித் தொழிலாளியின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தலையாய பங்கு வகித்த சங்கம் நமது N F T E சங்கம்.
இது போன்று அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்த நமது சங்கத்தை உடைப்பதற்காக மத்தியில் ஆளுகின்ற அரசுகள்  ஆட்சி  மாறுகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு சார்புடைய தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டது.  அரசியல் ரீதியாக, சாதீய ரீதியாக, கேடர் ரீதியாக தொழிலாளியைப் பிரித்து, தொழிற்சங்க பலத்தை குறைத்து பலவீனப்படுத்தி வைத்திருக்கிறது.   
சூழ்ச்சிதான் நடக்கிறது. நாமும் பிரிந்துதான் கிடக்கிறோம். இதைத் தெளிவாய் உணர்ந்த பின்னும் தொழிலாளி வர்க்கத்திடையே விட்டுக் கொடுக்கவோ, பரஸ்பரம் புரிதலை உருவாக்கிக் கொள்ளவோ பொது எதிரியை அடையாளப்படுத்தி அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்கவோ எந்த வித முயற்சியும் எடுக்கப்படாமல், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்வது, சேற்றை வாரி இறைப்பது என்ற போக்கு நீடிப்பதால் தொழிலாளி வர்க்க்ம் நெருக்கடிக்கு உள்ளாகி ஆளுவோரும் அதிகார வர்க்கமும இன்றைக்கு வளம் பெற்று நிற்கிறது,  
இந்த காலத்தில்தான் நமது தொழிற்சங்கமும் மேற்கண்ட காரணங்களுக்கெல்லாம் ஆட்பட்டு, அதே நேரத்தில் பொலிவிழக்காமல் வாழும் சங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது.   தலைவர்கள் குப்தா, ஞானையா, ஜெகன் பணியாற்றிய காலங்கள் இன்றைக்கும் பொற்காலங்களாக எண்ணிப்பார்க்கப்படுகிறது.  அந்தக் காலங்களில் நாம் அடைந்த பல முன்னேற்றங்களில் பலவற்றை இன்றைக்கு இழந்திருக்கிறோம்.  
அதைத் தொட்ர்ந்து தலைவர்கள் முத்தியாலு, ஆர்.கே, தமிழ்மணி, மாலி ஆகியோரின் சிறந்த பணிச் சேவைகளை தமிழ் மாநிலத்திற்கு அவர்களின் பணி ஓய்வுக் காலம் வரை நாம் பயன்படுத்திக் கொண்டோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலேயும் சீனியர் தலைவர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் தோழர்கள் சேது, R.V, மாலி ஜெயபால் ஆகியோர்கள் அந்தந்தப் பகுதிகளின் பிதாமகர்களாக செயல்படுகிறார்கள்.
நமது இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து நாம் ஒற்றுமைப் பாதையைக் கைக் கொள்ள வேண்டும்.  
   
    அங்கீகாரத் தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் தோற்றிருந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து உறுப்பினர் எண்ணிக்கையை குறையாது தக்க வைத்திருக்கின்றோம் என்பதை உணர்ந்திட வேண்டும்.  இதற்கு முழுமுதற் காரணம் நமது மாநிலச் செயலரின் தொய்வில்லாத சலியாத உழைப்பே, அணுகுமுறையே!
    நமது மாநிலச் செயலர் தோழர் பட்டாபியின் செயல்பாடு அதாவது, தோழமையோடு பழகும் பாங்கு, எளிமையான வாழ்வியல் முறை, எந்த எதிர்பார்ப்புமில்லா தியாகச் செயல்பாடு, எவர் கருத்துக்கும் மரியாதை கொடுக்கும் பாங்கு, எதிர்க் கருத்தை மதித்து நடக்கும் பண்பு, சாதீயச் சிந்தனையில் மூழ்காத, அதே நேரத்தில் கொண்ட அரசியல் கொள்கையில் பாதை மாறாத/உறுதி குலையாத நேர்மை தவறாத அணுகுமுறை ஆகியவற்றை  இம் மாநாட்டிலும் நீட்டிக்கச் செய்வோம்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம்.  
வாழ்த்துக்கள் தோழர்களே!

12 November 2012

10 October 2012

22-10-2012 அன்று 6-வது   TTA பயிற்சி வகுப்பு துவங்குகிறது.  நமது மாவட்டத்திற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

1-10-2012 முதல் IDA 5.8% உயர்ந்துள்ளது ( 67.3%). அதற்கான உத்தரவு வெளியாகியுள்ளது.





அடுத்த TTA பயிற்சி வகுப்பு வரும் 22-10-2012 அன்று RGM TTC மீனம்பாக்கத்தில் துவங்கவிருக்கிறது.

28 September 2012


ஓய்வு  பெரும் தோழர்களுக்கு ஓய்வு காலம் 
சிறக்க வாழ்த்துகள் !

1.       தோழர் S. முத்துக்குமாரசாமி STS/ Cuddalore

2.       தோழியர் V. ஜெயமணி STS/Cuddalore

3.       தோழர் P. செல்வராஜ் STS/Chidambaram

4.       தோழர் K. ராஜேந்திரன் STS/Chidambaram

5.       தோழர் S. விஜயன் TM/BVG

6.       திருமதி பத்மா பத்மனாபன் Sr. A.O/ Cuddalore

7.       திருமதி சந்திரிகா STS/NTS.
The Consumer Price Index (IW) for the month of August 2012 has increased by 2 points and stood at 214. The IDA increase from October 2012 will be 5.8%, i.e., an IDA of 67.3%.

27 September 2012



BSNL to connect 4,000 Kerala schools with broadband internet
 Click More details


24 September 2012

NFTE
GM அலுவலகக்கிளை - கடலூர் 
தோழியர் . V. ஜெயமணி STS அவர்களுக்கு 
பணி நிறைவு  பாராட்டுவிழா 
GM அலுவலகத்தில் 26-09-2012 புதன் 
மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.
அனைவரும் வருக!

16 September 2012

வாழ்த்துகிறோம்!








கடலூர் தோழர்.பாபு TM அவர்கள் திருச்சியில் அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் ஆணழகன் போட்டியிலும், 62 கிலோ எடைபிரிவில் 
பளு தூக்கும் போட்டியிலும் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அத் தோழருக்கு கடலூர் SSA முதுநிலைப் பொது மேலாளர் திரு.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் பாராட்டு தெரிவித்து கௌரவித்தார். அத் தோழருக்கு நமது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டு, இவ் வெற்றி  மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்!


11 September 2012

09 September 2012


We are sorry to announce the sad demise of 

our great Veteran Inder Sen Chaddah,

NFTE's guide and evergreen Office Secretary


at Delhi today 9th sep. 

We condole the death of our leader and well wisher


05 September 2012

03 September 2012

02 September 2012

TTA பயிற்சி வகுப்பு:
அனேகமாக முதல் பயிற்சி வகுப்பு 10௦-9 -2012 அன்று துவங்கலாம் என தெரிகிறது.

31 August 2012

IDA increase from October 2012 
is likely to be in the range of 5.3%, 
i.e. an IDA of 66.8%.

30 August 2012

29 August 2012

28 August 2012

25 August 2012



TTA பயிற்சி வகுப்புகள்  
செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் துவங்கும்
 எனத் தெரிகிறது.

21 August 2012

தோழர். G .வேதாசலம் அவர்களின் பணிநிறைவு  பாராட்டு விழா 


19 August 2012

18 August 2012

கடலூர் மாவட்டத்தில் 27-5-2012 அன்று நடைபெற்ற 

TTA  க்கான தேர்வில் வெற்றிபெற்ற தோழர்களுக்கு 

வீர வாழ்த்துகள்! 

கடலூரில் TTA  பயிற்சி வகுப்பு எடுத்த 

திரு.ஆராவமுதன் retd. DE CTTC ,
திரு .சேகரன்  retd DGM CTTC , 
திரு. ஜெயராமன்  retd. DE CTTC, 

அவர்களுக்கு எங்களது நன்றி!

வெற்றிபெற்றவர்கள் விபரம்  


1 RAVI C  TM  44 42 86
2 BABU R  TM  36 39 75
3 DHAKSHINAMOORTHY  TM  34 38 72
4 SUNDARAMOOTHY P  TM  33 39 72
5 CHAKRAVARTHY R  TM  29 42 71
6 RAJARAM N  TOA(G)  30 36 66
7 MANNANGATTI K  SR.TOA(G)  30 34 64
8 ARUMUGAM R  TM  28 35 63
9 ANANDHAN S  SR.TOA(G)  30 32 62
10 ELUMALAI L  TM  25 37 62
11 KUMAR G  TM  25 35 60
12 CHELLAMUTHU K  TM  26 32 58
13 RAVICHANDRAN S I  TM  29 29 58
14 SUNDARAM C  TM  26 31 57
15 KARUNAIVEL A  TM  22 33 55
16 PALANIVEL V II  TM  23 32 55
17 HAROON BASHA Y  TM  20 33 53
18 ELAVAZHAGAN S  SR.TOA(G)  21 31 52
19 NATARAJAN K  TM  24 27 51
20 BOOVARAGHAVAN A  SR.TOA(TL)  22 27 49
21 GOWRI K  TM  20 27 47
22 RENGANATHAN R  TG.MAN(BCR)  16 30 46
23 THINAKARAN M  SR.TOA(G)  18 28 46
24 SIDHARTHAN J  TM  20 26 46
25 SENTHILKUMAR J  SR.TOA(TG)  19 26 45
26 DHANASEKARAN N  TM  22 23 45
27 SIVASANKAR K  SR.TOA(G)  18 26 44
28 MAHESWARAN K  SR.TOA(G)  21 23 44
29 KULANDAINATHAN D  SR. TOA(TG)  21 23 44
30 BALAJI D  TM  24 20 44
31 JAYACHANDER G  TM  18 26 44
32 MAHESWARI P  SR.TOA(G)  15 22 37